அஜித் குமார் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராக உள்ள திரைப்படத்தில் நடிகர் தனுஷை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.
தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஓரு முன்னணி நடிகராக வலம் வருபவர். நடிகர் தனுஷூம் முன்னணி நடிகராக ஹாலிவுட், பாலிவுட் என அனைத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருபவர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் அஜித்திற்கு வில்லனாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால், இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வரவில்லை.
இதற்கிடையில் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிக்கபூர் தயாரிப்பில் முழுமையான ராபெரி படமாக இயக்கியுள்ள திரைப்படம் துணிவு இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்று வருகிறது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்கில் ரிலிசாக உள்ளது.

தற்போது பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் வருவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஓன்றாக உள்ளது. அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி, விக்ரம் படத்தில் சூர்யா என டிரென்டிங்கில் உள்ளனர்.
இந்தியில் ஷாருக்கான் படத்தில் நடிகர் விஜய் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக விஜய் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிகர் விஷாலிடம் வில்லன் கதாபாத்திரம் கேட்கப்பட்டு கால்ஷூட் பிரச்சனையால் மறுத்து விட்டார். அவருக்கு பதிலாக அர்ஜூன் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க தனுசிடம் பேசி வருவதாகவும் தனுசும் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இதையும் படியுங்கள்: பிக்பாஸ் 6 தமிழ்: அசீம் ஏடிகே இடையே வாக்குவாதம் மோதல்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.