தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் நாளை வெளியாகிறது

0
12

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ளது.

நடிகர் தனுஷ் சமீபத்தில் வந்த படங்கள் பெரிய அளவில் ஹீட் குடுக்கவில்லை என்பதால் இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்ற நினைப்பில் நடித்து முடித்துள்ளார். தொடர் தோல்வி படங்களை தந்ததால் இப்படத்திற்கு குறைவான சம்பளமும் பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் நாளை வெளியாகிறது

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதியான நாளை  திரையரங்குகளில் வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திருச்சி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 30) மாலை பிரம்மாண்டமாக நடத்தபட்டது.இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷும், அனிருத்தும் நேரலையில் கலந்து கொண்டனர்.

மேலும் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் தனுஷ் இப்படத்தை படக்குழுவினருடன் பார்த்துள்ளார் . மேலும் ரசிகர்களுக்கு இப்படத்தை காண்பிக்க தயாராக உள்ளதாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் தெரவித்துள்ளார்.

கர்ணன் படத்தை தொடர்ந்து, ஓராண்டுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இடையே உருவான ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே, தி கிரே மேன் ஆகிய 4 படங்கள் ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக வெளியானது.

மித்ரன் ஜவஹர் இதற்கு முன்பாக தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here