இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார்

0
16

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். 2019ம் ஆண்டு ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் துருவ். இருப்பினும் தன் முதல் படத்திலேயே தந்தையின் சேது படத்தை போல நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் தான் இந்த ஆதித்யா வர்மா. இதன் பின்னர் அப்பாவுடன் இணைந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் துருவ் விக்ரம் நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தியேட்டர்களில் வெளியாக வேண்டிய இந்த படம், கொரோனா பாதிப்பால் துரதிருஷ்டவசமாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியது.

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார்

தற்போது, துருவ் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி விருதுகளையும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மாரி செல்வராஜ் படங்கள் சமூகத்தின் குரலாகவும் சமூகத்தை மீட்டெடுக்கும் படமாகவும் இயக்கி அதில் வெற்றி பெற்றவர்.

இவர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் அந்த திரைப்படம் திரைக்கு வர காத்துக் கொண்டுள்ளது. இப்படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

‘கர்ணன்’ படம் போன்று ‘மாமன்னன்’ படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுவதாக சில தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர், தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு பிறகு, துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கப் போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here