அர்ஜூன் எழுதிய கதையில் அவரது அக்கா மகன் துருவா சர்ஜா நடிக்கிறார்

0
8

துருவா சர்ஜா. நடிகர், தயாரிப்பாளர், ஸ்கிரிப்ட் ரைட்டர், இயக்குனர் போன்ற தளங்களில் இயங்கி வருபவர் ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன். அவரது அக்காவின் மகன்கள் சிரஞ்சீவி சர்ஜா, துருவா சர்ஜா. இவர்கள் கன்னட நடிகர்கள். திடீர் மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். ஒரு மகனுக்கு தாயான அவரது மனைவி நடிகை மேக்னா ராஜ் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.

தற்போது கன்னடப் படத்தில் நடிக்கும் தனது அக்காவின் மகன் துருவா சர்ஜாவுக்காக அர்ஜூன் கதை எழுதியிருக்கும் பான் இந்தியா படம் ‘மார்ட்டின்’. இதை வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் உதய் கே.மேத்தா தயாரிக்க ஏ.பி.அர்ஜூன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படம் குறித்துப் பேசிய துருவா சர்ஜா,

kannada actor dhuruva sarja acting in his uncle story in martin movie

‘திரையுலகில் எனக்கு இன்ஸ்பிரேஷன் எனது அங்கிள் அர்ஜூன். நான் கேட்டதற்காக ‘மார்ட்டின்’ கதையை எழுதினார். எனது படத்தில் ரசிகர்கள் என்னென்ன விரும்புவார்கள் என்று அவரிடம் சொல்லி நிறைய மாற்றங்கள் செய்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்திய அளவில் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். ஹுரோயின்களாக வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் மற்றும் முக்கிய வேடங்களில் சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் நடித்து இருக்கின்றனர். ராம், லக்ஷ்மன் இணைந்து சண்டைக் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய, தியேட்டரில் ஓடும் டீசருக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்’ என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here