குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்

0
14

குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்: பொதுவாக குளிர்காலத்தில் சூரிய கதிர்களின் தாக்கம் குறைந்து காணப்படும் ஆதலால், நம் உடல்களின் மீது சூரிய கதிர் வீச்சுகள் படுவதில்லை அதனால் சூரிய கதிரால் கிடைக்கக்கூடிய வைட்டமின் டி நமக்கு கிடைக்காது. அதனால் நாம் அன்றாடம் உணவுகள் வழியே வைட்டமின் டி அதிகமாக இருக்கும் உணவு மற்றும் பழவகைகளை உண்பதன் மூலமும் நாம் வைட்டமின் டி சத்தினை பெறலாம்.

வைட்டமின் டி அதிகம் காணப்படும் பால்,முட்டை, மீன், கோழி, ஆரஞ்சு பழச்சாறு போன்றவைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், குளிர் காலங்களில் நோய் தொற்றுகள் அதிகம் வரக்கூடும் எனவே அந்த நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நாம் அன்றாட உணவுகளில் மாற்றங்களை கொண்டு வந்து அதனை பின்பற்றுவது சிறப்பு.

குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்

குளிர் காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவுகள்:

  • தினமும் சுக்கு மல்லி காபி வைத்து சுடச்சுட அருந்தி வருவது குளிர் காலத்தில் எளிமையான மருத்துவமாக அமையும்.
  • வாரத்திற்கு மூன்று அல்லது இரண்டு முறையாவது மருங்கைக் கீரை சூப் செய்து சாப்பிடுவது நல்லது.
  • எளிதில் ஜிரணமாகும் உணவு வகைகளை செய்து சாப்பிடுவதும் உடலுக்கு மிக நல்லது.
  • இட்லி, தோசை, சேமியா உப்புமா, ரவை உப்புமா என அனைத்திலும் சீரகம் மிளகு சேர்த்து கொள்வது சளி தொல்லைகள் அன்டாமல் பார்த்துக் கொள்ளும்.
  • இது போன்ற குளிர் காலங்களில் முக்கியமாக தூரித உணவு வகைகளை உண்பதை தவிர்த்தல் எப்போதும் நல்லது.
  • குறிப்பாக குளிர்காலங்களில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்த உணவுகளை உண்பது உடலுக்கு ஆரோகியத்தை தரும்.
  • வாரத்திற்கு ஓருமுறை மிளகு, இஞ்சி, சீரகம் கலந்த பொங்கல் சாப்பிடுவது குளிர் காலத்தில் ஏற்படும் சளி, இருமல், தொண்டை பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும் அருமருந்தாக இருக்கினறது.
  • தண்ணீரை சூடுப்படுத்தி வைத்து மிதமான சூட்டில் பருகுவது மேலும் உடலுக்கும் தொண்டைக்கும் இதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்: பற்களில் மஞ்சள் கறையால் சிரமப்படுகிறீர்களா? இந்த பதிவை பாருங்கள்

குளிர் காலங்களில் சாப்பிட வேண்டிய பழ வகைகள்:

குளிர் காலங்களிலும் வெப்பம் நிறைந்த காலங்களிலும் பழ வகைகளை நாம் அன்றாடம் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். அதிலும் குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய பழம் எது என்பதையும் நாம் தெரிந்து வைத்து கொண்டு சாப்பிட்டு வருவது நல்லது.

பப்பாளி பழம்:

குளிர்காலம் முதல் வெப்ப காலம் வரை எப்போதும் கிடைக்கக் கூடிய பழம் இந்த பப்பாளி இதில் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது குளிர் காலத்திற்கு ஏற்ற பழமாகவும் இருந்து வருகின்றது. வாரம் ஓன்று அல்லது இரண்டு முறை இப்பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு முதன்மையான பழமாக இருக்கின்றது. எதிர்ப்பு சக்தியை தரும் பழமாக இருந்து வருகின்றது. நரம்புகள் பலமடையும், ரத்தம் விருத்தி அடையும், முக்கியமாக பெண்க்கு ஏற்படும் மாதவீடாய் பிரச்சனைகளுக்கு ஏற்ற பழமாகும். சரிவர மாதவீடாய் வராத இக்காலக்கட்டத்தில் இப்பழத்தை உண்டு வந்தால் மாதவீடாய் பிரச்சனைகள் சீராகி நல்ல முன்னேற்றம் தெரியும்.

விளாம் பழம்:

விளாம் பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் முக்கியமாக குளிர் காலங்களில் இந்த பழத்தை சாப்பிடுவதால் எண்ணற்ற பலனை அடைய முடியும். பசியை தூண்டும் ஜிரணக்கோலாறுகளை சரி செய்யும் இதயத்தை பலப்படுத்தும் ஞாயபக சக்தி அதிகரிக்கும் மந்தமான நிலை சரியாகும் நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கும். இப்பழத்தை வெல்லம், கருப்பட்டி, பணங்கற்கண்டு கொண்டு கலந்து சாப்பிடலாம். இது குளிர்காலத்திற்கு ஏற்ற பழமாகவும் இருந்து வருகின்றது.

இது போன்ற பலவகையான பழங்கள் இந்த குளிர்காலத்தில் ஏற்றதாக இருக்கிறது. எந்த ஓரு பழத்தையும் குளிர்சாதனப் பெட்டகத்தில் வைக்காமல் அப்படியே பழுக்க விட்டு பழத்தை சாப்பிட வேண்டும். குளிர் காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்தல் நல்லது.

இது போன்ற பல நல்ல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here