இந்தியாவில் அரசு பள்ளிகளில் டிஜிட்டல் எஜிகேஷனை மேம்படுத்தவும் எளிமையாக மாணவர்களிடம் எடுத்து செல்லவும் சில திட்டங்களை முன்னிறுத்த வருகிறது கூகுள் நிறுவனம்.
நம் தேவைப்படும் அனைத்து தகவல்களையும் பெற உட்கார்ந்த இடத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள ஓரு ஆன்ட்ராய்டு போன் மூலம் கூகளில் கேட்டு எளிதில் பெறமுடியும். ”கூகுள் இன்றி இவ்வுலகேது’‘ என்று சொல்கின்ற அளவிற்கு கூகுள் இன்று இன்றமையாத ஓன்றாக உள்ளது.

யாமிருக்க பயமேன் என்ற முருகப்பெருமானின் வாசகம் இன்று கூகுள் இருக்க பயமேன் என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற பயனை தருகிறது. கூகுலின் தலைமையகம் அமெரிக்காவின் மவுண்டைன் வீயு (Mountain view) வளாகத்தில் அமைந்துள்ளது.
இக்கூகுள் நிறுவனம் இந்தியாவில் பெரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அமெரிக்காவை தாண்டி இந்தியாவில் ஹைதராபாத்தில் ஓரு பெரிய கூகுள் கிளை அலுவலகத்தை நிறுவ திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே, இந்தியாவில் 2004 ம் ஆண்டில் பெங்களூர், கூர்கான், மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் கிளை நிறுவனங்களை அமைத்துள்ளது. இவை அனைத்தும் சிறியது. எனவே பெரிய அளவில் கிளை நிறுவனம் ஓன்றை இந்தியாவில் நிறுவ திட்டமிட்டு அதற்காக ஹைதராபாத்தில் உள்ள கச்சிபாத் என்ற இடத்தில் 7.3 ஏக்கர் நிலத்தையும் 2019 ம் ஆண்டே வாங்கி அதில் 3 ஆயிரத்து 300 மில்லியன் இடத்தில் கட்டிடங்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதனால் இந்தியாவில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பதில் சிறிதும் அச்சமில்லை.
இங்கு டெக்னிக்கல் சப்போர்ட், கூகுள் விளம்பர பிரிவு, கூகுள் மேப், யூ டிபூப் சப்போர்ட் ஆகியவற்றோடு கூடுதலாக ஆராய்ச்சி பிரிவும் தொடங்கப்படவுள்ளது. இதனால் டெக்னாலஜியில் இன்னமும் ஒரு படி மேலே செல்ல நம்ம இளைஞர்களுக்கு உதவும் எனத்தெரிகிறது.
அரசுப் பள்ளி மாணக்கர்களுக்கு எளிதாக டிஜிட்டல் எஜிகேஷன் கிடைப்பதற்கான ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படும் எனத்தெரிகிறது. இதன்மூலம் நம் குழந்தைகள் அனைவருக்கும் டெக்னாலஜி எஜிகேஷன் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்படுகிறது.