இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் என்ன?

0
6

ஏ.ஆர்.முருகதாஸ்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் கடந்த 2005ல் வெளியான படம் ‘கஜினி’. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கான், அசின் நடித்தனர். ‘கஜினி’ என்ற பெயரில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் கடந்த 2008ல் திரைக்கு வந்தது. இந்நிலையில் திரைப்பட விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸை நேரில் சந்திக்கும் ரசிகர்கள் சூர்யா நடித்த ‘கஜினி’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எப்போது இயக்குவீர்கள் என்று கேட்க ஆரம்பித்தனர்.

director AR Murugadoss reveals his next movie

இதற்கு உடனடியாக பதில் சொல்லாத ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டியில் ‘துப்பாக்கி’ படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார். அவரது பதில் இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் ‘கஜினி’ படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும் என்று அவர் பதிலளித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்,

‘தமிழ் மற்றும் இந்தியில் நான் இயக்கிய ‘கஜினி’ பம் மிகப்பெரிய வெற்றிபெற்று அதிக வசூல் செய்து சாதனை படைத்தன. இப்படங்களில் அசின் நடித்திருந்த கல்பனா கேரக்டர் இறந்து விட்டது. சூர்யா கேரக்டருக்கு ஞாபகமறதி ஏற்பட்டுள்ளது. எனவே ‘கஜினி’ படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் இல்லை. என்னிடம் நிறைய கதைகள் இருப்பதால் அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்து எனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here