உலக நாயகனின் 233 வது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்

0
5

உலக நாயகனின் 233 வது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கமலஹாசன் திரையுலகத்திற்கு சிறுவயது முதலே நடித்து வருகின்றார் ஏத்தாழ 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் இன்றும் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார் என்பதே பேரராவாரம். ரஜினி கமல் என அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருந்த காலங்களில் சிறிது காலம் முடங்கிய கமல் திரும்பவும் நடிப்பு துறையில் தனைன ஈடுப்படுத்தி கொண்டு ரசிகர்களுக்கு தகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டுள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமா உலகில் பெரும் சாதனை புரிந்தததது குறிப்பிடதக்கது. இந்த காலக்கட்டத்தில் கூட 100 நாட்கள் இத்திரைப்படம் ஓடி சாதனை படைத்தது என்றால் அது மிகையாகாது. இதுவரை 500 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார் கமல்.

உலக நாயகனின் 233 வது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்

கமலின் பிறந்தநாளில் ஓரு அறிவிப்பு வந்தது அதில் மணிரத்னத்துடன் இணையும் கமல் என்று அதாவது 234 வது படத்தை மணிரத்னம் இயக்குவதாகவும் கமலின் ராஜ்கமல் இன்டஸ்டிரி உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ்ட் இணைந்து தயாரிக்கவுள்ள படமாக பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகர் கமல் இந்தியன் 2 பாகத்தில் பிசியாக நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், அடுத்த அடுத்த அப்டேட் வந்த வண்ணம் உள்ளது. 234 படத்தை மணிரத்னம் இயக்கவுள்ள நிலையில் 233 வது படத்தை யார் இயக்குவார் என பல சந்தேகங்கள் ரசிகர்களுக்கு எழுந்து வந்தது.

அந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் விதமாக கமலின் 233 வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. வினோத் அஜித்தை வைத்து இயக்கும் 3 படமாக துணிவு படம் இருந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகின்றது. அடுத்ததாக கமலை வைத்து படம் இயக்கவுள்ளார் வினோத் இந்தியன் 2 க்கு பிறகு படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: தளபதி 67 படத்திற்கான ஸ்டிரிமிங் அதிகாரத்தை வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்

கமலின் 230 வது படம் விஸ்வரூபம் என்றும் 231 வது படம் இந்தியன் 2, 232 வது படம் விக்ரம் திரைப்படம் 233 வது படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். அடுத்ததாக 234 வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். தொடர்ந்து கமல் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here