தளபதி 67 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கோவையில் மைக்கேல் படத்தின் விழாவில் கலந்து கொண்ட கனகராஜ் விரைவில் அப்டேட் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இவர் இயக்கிய கைதி மற்றும் உலக நாயகனை வைத்து மெகா ஹூட் கொடுத்த விக்ரம் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜயை வைத்து ஏற்கனவே மாஸ்டர் படத்தை வெற்றிகரமாக முடித்து வெற்றி பெற்றார். தற்போது விஜயின் அடுத்த படத்தையும் இவரே இயக்கி வருகிறார்.
கடந்த பத்து நாட்களாக படப்பிடிப்பு பணிகள் சென்னை நகரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றிய முறையான அறிவிப்பை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு இதற்கான ப்ரோமோ வீடியோவையும் உருவாக்கி உள்ளது. இது வருகிற மூன்றாம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பும் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் அப்டேட் இன்று மாலை 6.07 க்கு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சமூக வலைத்தளம் முழுக்க டிரெட் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை சேவன் ஸ்கிரின்ஸ் தயாரிக்கிறது என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் இசைக்கு அனிருத் ரவிச்சந்திரன் மீண்டும் இணைந்துள்ளார் இவர் பீஸ்ட் படத்தில் இணைந்து பணியாற்றி தற்போது வரை உலக அளவில் ஹலமதி பாடல் ரீச்சாகி உள்ள நிலையில் மீண்டும் அனிருத் இசையமைப்பாளராக இப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: FEB 3ல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.