அஜித்தின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை – இயக்குனர் பி.எஸ்.மித்ரன்

0
10

அஜித்குமார்: அஜித்தின் 62வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். ஆனால் அவர் சொன்ன கதை பிடிக்காததால் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மகிழ் திருமேனி அல்லது பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கலாம் என தகவல் பரவியது.

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’, கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ ஆகிய படங்களை மித்ரன் இயக்கியுள்ளார். ஆக்ஷ்ன் படங்களை சமூக கருத்துடன் தருவதில் மித்ரனுக்கு நல்ல பெயர் உள்ளது. அதனால் அஜித் அவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

I am not direct the ajith's ak 62 movie said director p.s.mithran

இது பற்றி மித்ரனிடம் கேட்டபோது, ‘அஜித் படத்தை நான் இயக்கவில்லை. அவர்கள் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் வரவும் இல்லை. அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். அதில் யார் நடிப்பார் என்பது இன்னும் முடிவாகவில்லை’ என்று கூறினார்.

விஜய்யின் லியோ படம் திரைக்கு வரும் அதே நாளில் தனது படத்தையும் ரிலீஸ் செய்ய அஜித் விரும்பினாராம். ஆனால் இயக்குனர் தேர்வு தாமதமாகி வருவதால் அஜித் படம் ரிலீசாக தாமதமாகும் என்று கூறப்படுகிறது. லியோ படம் இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here