கமல்ஹாசன்: கமல்ஹாசனுடன் ராஜமவுலி, பிருத்விராஜ் சந்தித்து பேசியது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் 2 படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து அவர் வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அதை முடித்த பிறகு மணிரத்னம் இயக்கப் போகும் படத்தில் நடிக்கப் போகிறார். அடுத்தடுத்து அவர் படங்களில் பிசியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு பான் இந்தியா படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க கமல்ஹாசனிடம் ராஜமவுலி கேட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் சமீபத்தில் கமல்ஹாசனும், ராஜமவுலியும் சந்தித்துள்ளனர். அப்போது நடிகர் பிருத்விராஜ், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கவுதம் மேனன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்கும் மகேஷ் பாபு படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை நடிகர் பிருத்விராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் 5 லட்சம் லைக்குகளை பெற்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.