லாலா அமர்நாத்: இந்தியாவின் முதல் கிரிக்கெட் ஸ்டார் என்று புகழ் பெற்றவர் லாலா அமர்நாத். கிரிக்கெட்டை சர்வதேச அளவில் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றியவர் லாலா அமர்நாத். சர்வதேச போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் ஆவார். இந்தியாவுக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது அவரது வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இதை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார்.
இந்தியில் மிக பிரபலமான இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இந்தியில் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ ஆகிய ஹிட் படங்களை இயக்கியுள்ள அவர் தற்போது ஷாருக்கான் நடிக்கும் ‘டன்கி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக அவர் இயக்க இருக்கும் கிரிக்கெட்டர் லாலா அமர்நாத்தின் வாழ்க்கை படத்தில் அவர் கேரக்டரில் நடிக்க ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், தோனி, கபில் தேவ், சவுரவ் கங்குலி, மிதாலி ராஜ் ஆகியோரின் வாழ்க்கைச் சம்பவங்கள் திரைப்படமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. லாலா அமர்நாத் கேரக்டரில் ஷாருக்கான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.