ராம்குமார்: சமீபத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் ஏற்கனவே அவர் நடித்த ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம்குமாருடன் மீண்டும் இணைய உள்ளார். இந்த இரண்டு படங்களிலுமே விஷ்ணு விஷால்தான் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில் ராம்குமார் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதை பேன்டசி கலந்த படமாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
சில காரணங்களால் இந்த படம் டேக் ஆஃப் ஆகவில்லை. இந்நிலையில் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் ராம்குமார் இணைந்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் காமெடி, பேன்டஸி கலந்த காதல் கதை என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.