மாதவனுக்கு விருந்து கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா

0
12

சுதா கொங்கதரா:  மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. ஆய்த எழுத்து படம் உருவாகும் போது சுதா அதில் பணியாற்றினர். அப்போது படத்தில் நடித்த மாதவனுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இறுதிச் சுற்று படத்தை சுதா கொங்கரா இயக்கும் போது அதில் மாதவனை நடிக்க வைத்தார்.

அவர்களின் நட்பு இந்த படத்தால் மேலும் வலுவானது. தற்போது சூரரைப் போற்று படததை இந்தியில் ரீமேக் செய்து அக்ஷ்ய் குமார் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதற்காக மும்பையில் அபார்ட்மென்ட் ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து அவர் தங்கியுள்ளார்.

சுதாவின் நண்பர் மாதவனும் மும்பையில்தான் வசிக்கிறார். இதையடுத்து தனது வீட்டுக்கு சாப்பிட வருமாறு மாதவனை சுதா அழைத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் லன்ச் சாப்பிட அவரது வீட்டுக்கு மாதவன் சென்றார்.

director sudha kongara serving food for madhavan in her mumbai house

சுதா தனது கையால் சமைத்த வங்கை அன்னம், பொடி சாம்பார், வத்த குழம்பு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை மாதவனுக்கு பரிமாறினார். அதை ரசித்து சுவைத்து மாதவன் சாப்பிட்டார். இந்த விருந்துக்கு நன்றி கூறிய நடிகர் மாதவன்,

‘நீ்ங்கள் (சுதா) ஒரு அசாதாரண இயக்குனர் மட்டுமின்றி அசாதாரணமான சமைத்து விருந்தளிப்பவர் என்பதையும் புரிந்து கொண்டேன். உங்கள் கைகளால் உங்கள் அழகான இல்லத்தில் எனக்கு நீங்கள் பரிமாறுவது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சுதா கொங்கரா’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here