இயக்குனர் சுந்தர்.சியின் அடுத்த திரைப்படம் ‘காபி வித் காதல்’

0
12

காபி வித் காதல்:  இயக்குனர் சுந்தர்.சி அவர்கள் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் நகைச்சுவையை மையப்படுத்தியே அமையும். அவர் திரைப்படங்களில் நடிக்கும் காமெடி கதாபாத்திரங்கள் படத்திற்கு மிக முக்கியமானதாக அமையும். அது அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாகவும் அமையும். அந்த வரிசையில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக்,சந்தானம், சூரி, யோகி பாபு போன்ற காமெடி நடிகர்கள் இவர் படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. மறைந்த காமெடி நடிகர் விவேக் அவர்கள் கடைசியாக சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 3 படத்தில் நடித்திருந்தார்.

சுந்தர்.சி அவர்களின் அடுத்த திரைப்படம் ‘காபி வித் காதல்’. இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு, பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ் அருண்குமார் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 7 ந் தேதி திரைக்கு வருகிறது.

sundar.c's coffee with kadhal

பீல்குட் படம் இயக்க வேண்டும் என்ற சுந்தர்.சி யின் பல வருட ஆசை இப்படத்தில் நிறைவேறியுள்ளது. வெவ்வேறு குணம் கொண்ட மூன்று சகோதரர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே சுந்தர். சி இயக்கத்தில் சிவா, விமல், அஞ்சலி, ஓவியா, சந்தானம் நடித்த ‘கலகலப்பு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் 2ம் பாகத்தில் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மீண்டும் ஜெய், ஜீவா, சுந்தர.சி மூவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘காபி வித் காதல்’. இப்படத்தில் யோகி பாபுவும் இடம் பெற்றிருப்பதால் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இப்படத்தின் கதை நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் புரமோஷன் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here