சூர்யா: கடந்த 2020ம் ஆண்டு சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்து மெகா ஹிட்டான படம் ‘சூரரைப் போற்று’. இப்படம் அப்போது ஓடிடியில் வெளியானது. இப்படத்தை பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. நடிகர் சூர்யா முதல்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அக்ஷ்ய் குமார், இந்தி நடிகை ராதிகா இதில் நடிக்கிறார்கள். சுதா கொங்கராவே இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகிறார். சூர்யா இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது சுதா கொங்கராவின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். காயம் அடைந்த கையின் புகைப்படத்தை வெளியிட்டு ‘இது எனக்கு தேவையில்லாத வேலை. இதனால் ஒரு மாத படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.