வெற்றிமாறன்: ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’,’வட சென்னை’, ‘அசுரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் தற்போது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, சூரி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் போஸ்ட புரோடக்ஷ்ன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை அவர் இயக்க இருக்கிறார்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவும், ஆர்ஆர்ஆர் படத்தின் ஹீரோவுமான ஜீனியர் என்.டி.ஆர் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. வெற்றிமாறன், ஜீனியர் என்.டி.ஆர்ஐ சந்தித்து மூன்று கதைகள் சொல்லியிருப்பதாகவும் அதில் ஒரு கதையை ஜீனியர் என்டிஆர் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூற்பபடுகிறது.
அந்தக் கதை இரண்டு பாகங்களாக எடுக்கப்பட உள்ளதாகவும், அதில் முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் லீட் ரோலில் நடிக்க உள்ளதாகவும், இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ட்விட்டரில் #vetrimaaran என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.