வெற்றிமாறன்: விஜய் சேதுபதி, சூரி, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ நடிக்கும் படம் ‘விடுதலை’. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ளார். அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்ததையும் தற்போது அப்பழக்கத்தை கைவிட்டது குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
‘கல்லூரியில் படிக்கும்போது ஒருநாள் முழுக்க 70 சிகரெட் புகைப்பேன். தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தை இயக்கிய போது ஒரேநாளில் 180 சிகரெட் வரை புகைத்துள்ளேன். அப்போது ஷீட்டிங் ஸ்பாட்டில் என்னால் 100 சதவிகிதம் சிறப்பான விஷயத்தைக் கொடுக்க முடியவில்லை என்பதை உணர்ந்தேன். எனது குரு பாலு மகேந்திரா சொல்லும்போது ‘இயக்குனராக வேண்டும் என்றால் முதல் தகுதி என்ன என்பது குறித்து இயக்குனர் சத்யஜித்ரேவிடம் கேட்டபோது பதிலளித்த அவர், ‘ஒரு இடத்தில் உங்களால் 8 மணி நேரம் தொடர்ந்து நிற்க முடியும் என்றால், மற்ற திறமைகள் தானாகவே வரும்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அர்த்தம் உடல்ரீதியாக நாம் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதே’ என்று குறிப்பிட்டார்.
அதுபோல் என்னால் இருக்க முடியாத நிலையில் இசிஜி எடுத்தேன். அதில் மாற்றங்கள் தெரிந்தது. உடனே டாக்டரின் ஆலோசனைப்படி புகைப்பதை நிறுத்திவிட்டேன். இனி நான் இயக்கும் படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்ப்பேன்’ என்று அவர் கூறியுள்ளார்.