இயக்குநர் விக்னேஷ் சிவன் EXCULSIVE தகவல் ஓன்றை வெளியிட்டுள்ளார். செஸ் ஓலிம்பியாட்டின் விழா சிறப்பிக்க தான் ஓரு அங்கமாக இருப்பது வாழ்நாளில் மறக்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
44 வது செஸ் ஓலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதன் முறை அதிலும் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுவது பெருமைக்குரியது. ஓரு செஸ் ஓலிம்பியாட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்றால் 18 மாதங்கள் வரை ஆகும் என்று கூறினர். ஆனால், தமிழக முதல்வரோ இதை 4 மாதத்தில் முடித்து சாதனை புரிந்துள்ளார்.

செஸ் ஓலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பல நாட்டிலிருந்தும் வீரர் மற்றும் வீராங்கனைகள் வந்தனர். இத்தொடக்க விழாவில் ஜூலை 29 ம் தேதி இந்திய நாட்டின் பாரத பிரதமர் மோடி வந்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதுநாள் வரை செஸ் ஓலிம்பியாட் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறவது குறிப்பிடத்தக்கது. விளையாட வரும் வீரர்களை வரவேற்கும் விதமாக குதிரை வடிவில் தம்பி சிலை அமைக்கப்பட்டது.
இப்போட்டிக்கான விளம்பரங்களை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான அமைத்தார். முதல்வர் ஸ்டாலின் நடித்திருந்தார். இப்போட்டிக்காக சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் முழுவதுமாக சதுரங்க ஆட்டத்தின் கருப்பு வெள்ளை நிற பெயின்ட் அடிக்கப்பட்டு சிறப்பாக அமைக்கப்பட்டது.
மேலும், தொடக்க விழாவில் தமிழ் மண் சார்ந்த உலகநாயகன் குரலில் தமிழ் வரலாறு ஓலித்தது. அதுபோல செஸ் ஓலிம்பியாட்டின் இறுதி விழாவிலும் மீதமுள்ள தமிழ் மண் குறித்த வரலாறு இடம் பெறும் அதையும் உலக நாயகன் குரலில் கேட்கலாம் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
நிறைவு விழாவிற்கு இந்திய கூல் கேப்டன் தல தோனி வருவதாக தகவல் முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் நான் ஓரு அங்கமாக இருப்பது வாழ்வில் மறக்க முடியாது என்று இயக்குநர் விக்னேஷ் கூறியுள்ளார்.