ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற நடிகர் நடிகைகள். இந்தியாவில் உள்ள நடிகர் நடிகைகள் தொடர்ந்து ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். இது அவர்களை கெளரவிக்கும் விதமாக உள்ளது.
ஐக்கிய அமீரகத்தின் தேசிய ஸ்பான்சரின் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. கோல்டன் விசா என்பது நீண்ட காலம் அந்நாட்டில் தங்கி படிக்கவும் தொழில் செய்யவும் சுற்றுலா செல்லவும் என பல எண்ணற்ற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் உருவாக்கப்பட்ட திட்டம் இதன் மூலம் 10 ஆண்டுகள் வரை விசாவை பயன்படுத்தி தங்கி கொண்டு தன் பணிகளை செய்து கொள்ளலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் இத்தகைய கௌரவ கோல்டன் விசாக்களை வழங்குகிறது.

இந்நிலையில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன்லால், மம்முட்டி, மம்முட்டி மகன் துல்கர் சல்மான் என திரை நட்ச்சத்திரங்களுக்கும் தமிழ் நட்ச்சத்திரமான இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் அவர்களுக்கு முதன் முதலாக கோல்டன் விசா வழங்கப்பட்டது.
தொடர்ந்து, நாசர், ஏ ஆர் ரகுமான், விஜய் சேதுபதி, திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
நடிகைகளில் முதன் முதலாக திரிஷாவிற்கு தான் வழங்கப்பட்டது. பின் அமலாபால், மீனா, ஆன்டிரியா என பலர் விசா வாங்கியுள்ளனர். தற்போது நடிகர் சரத்குமாருக்கும் ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கியுள்ளது.
தற்போது திரைத்துறையினர் அதிகமானோருக்கு ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை அந்நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.