தீபாவளி ரிலீஸ்: ‘விருமன்’ , ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து அடுத்து கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார்’. இப்படம் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ராசி கண்ணா, லைலா, சங்கி பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரித்திருக்கிறார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் பி.எஸ். மித்ரன் ஆவார். தீபாவளியை முன்னிட்டு வெளியான சர்தார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம், பொன்னியின் செல்வனை தொடர்ந்து கார்த்திக்கு இது 3வது வெற்றி படமாக அமைந்துள்ளது.
ரிலீசான 4 நாட்களில் சர்தார் திரைப்படம் உலக அளவில் 47 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் 50 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படமும் கடந்த 4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 24 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தீபாவளி விடுமுறை முடிவதையொட்டி இப்படங்களின் வசூல் அதிகரிக்குமா அல்லது அதே அளவில் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.