”செல்போனில் குறைவான நேரத்தையும் நிஜ வாழ்க்கையில் அதிகமான நேரத்தையும் செலவிடுங்கள்” என மொபைல் போனைக் கண்டுபிடித்த மார்டின் கூப்பர் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஓரு நாளான 24 மணி நேரத்தில் 5% சதவீதம் மட்டுமே மொபைல் போனை பயன்படுத்துகிறேன் எனவும் கூறியுள்ளார்.
மொபைல் போன் இல்லாத வீடுகளே இல்லாத அளவில் மொபைலின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீட்டில் உள்ள ஓவ்வொருவருக்கும் ஓரு மொபைல் உள்ளது. அனைவரும் அதை நம்பியே உள்ளதைப் போல மாறிவிட்டோம். சிறிது நேரம் மொபைல் போன் இல்லை என்றாலும் நாம் எதையோ இழந்தைப் போல இருக்கிறோம்.

காய்கறிகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை மொபைல் போனில் ஆடர் செய்து மகிழ்கிறோம். உணவு ஆடர் செய்வது, பயணங்கள் மேற்கொள்வது, பணம் செலுத்துவது என அனைத்து தேவையும் பூர்த்தி செய்வதாக உள்ளது. பொழுதுப்போக்கு சாதனமாகவும் படிப்பு சம்பந்தமாக பயன்படுத்தவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனுக்கு அடிமையாகி இருக்கிறோம்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டவும் இன்று அம்மாக்களுக்கு உதவுகிறுது. இப்படியாக ஓவ்வொரு நாளும் மொபைல் போனுடனான தொடர்பு அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.
ஆனால், மொபைல் போனைக் கண்டுபிடித்த மார்டின் கூப்பர் மட்டும் ஓரு நாளில் 5 சதவீதம் மட்டுமே போனைப் பயன்படுத்துவதாக ஓரு தனியார் தொலைக்காட்சி ஓன்றில் பேட்டியில் கூறியிருக்கிறார். செல்போனில் குறைவான நேரத்தையும் நிஜ வாழ்க்கையில் அதிகமான நேரத்தையும் செலவிடுங்கள் எனவும் கூறியுள்ளார்.
1973 ஆம் ஆண்டில், கூப்பர் மோட்டோரோலா டைனாடாக் 8000X என்ற முதல் வயர்லெஸ் செல்லுலார் கருவியைக் கண்டுபிடித்தார். இதன் உருவாக்கம் பற்றி சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது அவர், “ஃபோன் SWITCH OFF ஆவதற்கு முன்பு நீங்கள் 25 நிமிடங்கள் வரை பேசலாம்.” என்றார்.
கூப்பர் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (IIT) 1950 ஆம் ஆண்டு மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து, கொரிய போரின் போது பணியாற்றினார். போருக்குப் பிறகு, அவர் Teletype Corporation இல் சேர்ந்தார், மேலும் 1954ம் ஆண்டு முதல் அவர் மோட்டோரோலாவில் பணியாற்றத் தொடங்கினார்.