மருத்துவர்களுக்கு 1000 கோடி பரிசு தந்ததாக DOLO 650 நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் அனைத்து விதமான மருத்துவ சேவைகளை பெறவும் சிரமப்பட்டனர். அப்போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மிக முக்கிய மருந்தாக டோலோ 650 மருந்துகள் கொடுக்கப்பட்டது.
அப்போது இந்த டோலோ 650 மருந்து செம வேகத்தில் விற்பனை ஆனது. இந்த மாத்திரைக்கு டிமேன்டும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தொற்றுக் காரணமாக மக்கள் மிகவும் சிரமப்பட்டு இருந்த பொழுது மருத்துவர்களிடம் தன் மாத்திரையான டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பரிசு பொருட்களை ஏறாலாமக வழங்கியுள்ளது இந்நிறுவனம். இதனை மத்திய நேரடி வரிகள் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஓன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் வாதிடுகையில், ”காய்ச்சலுக்கு அளிக்கப்படும், ‘டோலோ 650’ மாத்திரைகளை நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைப்பதற்காக, அந்நிறுவனம் 1,000 கோடி ரூபாய் பணத்தை டாக்டர்களுக்கான ஊக்கத்தொகைக்காக செலவிட்டுள்ளது,” என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ”கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்ட போது கூட எனக்கு அந்த மாத்திரைகள் தான் பரிந்துரைக்கப்பட்டன. இது மிக தீவிரமான பிரச்னை. இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்,” என, நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.இது தொடர்பாக, 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.