சந்திரகிரகணத்தின் போது செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை

0
25

சந்திரகிரகணம் 2022 (Lunar Eclipse): இந்த ஆண்டின் இறுதி மற்றும் இரண்டாது சந்திரகிரகணம் இன்று நடைபெறுகிறது. சூரியன், சந்திரன், பூமி என்ற மூன்று கோள்களும் ஓரே நேர் கோட்டில் பயணிக்கும் பொழுது இந்த சந்திரகிரகணம் நிகழும். மேஷ ராசியில் உள்ள ராகு உடன் இணையும் போது இந்த சந்திர கிரகணம் நிகழ்வதாக ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது.

முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும். இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குச் செல்லச் செல்ல சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலும். இந்தப் பகுதிகளில், சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். மேற்கு வானில் சூரியன் அந்தி சாயும் போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

இதையும் கவனியுங்கள்: கங்கை கொண்ட சோழபுரம்: வெகு விமர்சையாக நடந்தேறிய அன்னாபிஷேகம்

சந்திரகிரகணத்தின் போது செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை

இந்த கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தென்படும். மதியம் 2.40 மணிக்கு தொடங்கி மாலை 6.26 வரை நிகழகிறது. இந்த சந்திரகிரகணத்தின் போது என்ன செய்யலாம் என்ன என்ன செய்யக் கூடாது என்பதை இப்பதிவில் காண்போம்.

சந்திர கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:

இந்து முறைப்படி கிரகணம் ஜோதிட சாஸ்திரங்களுடன் தொடர்புடையதாக பார்க்கப்பட்டு வருகின்ற மரபாக இருந்து வருகின்றது. விஞ்ஞான ரீதியாக பல அறிவியல் கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும் ஜோதிடத்தின் பலன்களையும் அறிந்து  அதன் பலன்களையும் அந்த கிரகணத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் ஜோதிட நூல்கள் கூறியுள்ளது.

  • கிரகணத்தின் போது தியானம் செய்தல் நன்மை பயக்கும்.
  • சந்திர கிரகணத்தின் போது இறைவனை நினைத்து தனக்கு தெரிந்த எளிய மந்திரங்களை ஜெபித்தல் நல்லது.
  • வீட்டை சுத்தம் செய்து கோமியம் தெளித்து வைத்தல் வேண்டும்.
  • கிரகணத்தின் போது ஏற்படும் எதிர்மறை தாக்கங்களை தவிர்க்க, உணவு பதார்த்தங்களில் துளசி இலைகளை போட்டு வைக்கலாம்.
  • கிரகணத்தின் போது உணவு நீர் என எதையும் எடுத்து கொள்ளாமல் இருப்பது நன்மை.

கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:

  • கர்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
  • கிரகணம் நிகழும் போது உண்பதையும் குளிப்பதையும் தவிர்த்தல் வேண்டும்.
  • கிரகணத்தின் போது ஏற்படும் எதிர்மறை தாக்கங்களிலிருந்து கர்பினி பெண்கள் தங்களை காத்து கொள்வது அவசியம்.

சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பதால், சிறப்பு உபகரணங்கள் ஏதும் தேவையில்லை. நிலாவின் அழகைக் கண்டு ரசிக்கலாம். இந்தியாவில் இருந்து அடுத்த சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று பார்க்க முடியும். அதுவும் ஒரு பகுதி சந்திர கிரகணம் ஆகும்.

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here