ஓவியர் செல்வம்: நடிகர் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. துணிவு படத்தின் இரண்டாவது பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். பாடல் வெளியானதில் இருந்தே அதிகமான பார்வையாளர்களை பெற்றுவரும் காசேதான் கடவுளடா பாடலால் அஜித் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஓவியர் சு.செல்வம். அஜித்தின் ரசிகரான இவர் துணிவு திரைப்படம் மற்றும் பாடல்கள் வெற்றி பெற வேண்டி பிரஷ் பயன்படுத்தாமல், காசேதான் கடவுளடா என்ற பாடல் வரிக்கு ஏற்ப ‘காசாலேயே’ நடிகர் அஜித்தின் உருவத்தை நீர் வண்ணத்தில் 20 ரூபாய் நாணயத்தை தொட்டு பத்தே நிமிடத்தில் வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் மற்றும் பாெதமக்கள் ஓவியர் செல்வத்துக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.