துல்கர் சல்மான்: துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது. துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கைையச் சிறப்பிக்கும் வகையில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்தாண்டு ஓணம் அன்று திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் 2வது போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. அபிலாஷ் என்.சந்திரன் எழுத்தில் உருவாகும் இந்த படம் பான்-இந்தியா படமாக உருவாகி வருகிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பை ஷ்யாம் சசிதரன் செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்த படம் கேரளாவின் சிறந்த பண்டிகையான ஓணம் அன்று வெளியடப்படுவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.