துரந்த கால்பந்து கோப்பை: சுனில் சேத்ரியின் பெங்களூர் அணி வெற்றி

0
15

துரந்த கால்பந்து கோப்பை: சுனில் சேத்ரியின் பெங்களூர் அணி மும்பை அணியை வென்று முதன் முதலாக கோப்பையை பெற்றது.

கொல்கத்தா: துரந்த் கால்பந்து கோப்பை தொடர் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இதுவரை பெங்களூர் கோப்பையை வென்றது இல்லை. இந்த நிலையில் நேற்று பெங்களூர் அணி இறுதி போட்டியில் வலிமை வாய்ந்த மும்பை அணியை எதிர் கொண்டு கோப்பையை வென்றது.

இதையும் கவனியுங்கள்: india w vs england w 2022: முதல் ஓருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெங்களூர் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. சிவ சக்தி பெங்களூர் அணிக்காக 10வது நிமிடத்திலேயே முதல் கோல் எடுத்தார். அதன்பின் ஆலன் கோஸ்டா 61வது நிமிடத்தில் இரண்டாவது கோல் போட்டார். இதனால் ஆட்டம் பெங்களூர் பக்கம் தொடக்கத்திலேயே சென்றது.

துரந்த கால்பந்து கோப்பை: சுனில் சேத்ரியின் பெங்களூர் அணி வெற்றி

சுனில் அடித்த கார்னர் கிக்கில் ஆலன் கோஸ்டா 61வது நிமிடத்தில் இரண்டாவது கோல் போட்டார். இடையில் மும்பை அணி ஒரு கோல் அடித்தாலும், இரண்டாவது கோல் அடித்து அந்த அணியால் சமன் செய்ய முடியவில்லை. பெங்களூர் அணியின் தாக்குதல் நேற்று மிக சிறப்பாக இருந்ததால் மும்பை அணியால் வெற்றி பெற முடியவில்லை. இதன் மூலம் துரந்த் கால்பந்து கோப்பை தொடர் ஆட்டத்தில் முதல் முறையாக பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பல நாடுகளில் கால்பந்து விளையாட்டு மிக சிறப்பான மற்றும் மதிப்பு மிக்க விளையாட்டாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் கால்பந்து விளையாட்டு சிறப்பான இடத்தை பிடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனை அரசு கால்பந்து மீதான மதிப்பை மேம்படுத்தி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இது போன்ற தகவல்கள் மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், தமிழ் இலக்கியம், விளையாட்டு, சமையல், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here