கிரிப்டோ மோசடிகள் இந்தியர்களை எச்சரிக்கும் அமலாக்கத் துறை

0
8

கிரிப்டோ மோசடிகள் பெருகி வருவதால் இந்தியர்களை எச்சரிக்கிறது அமலாக்கத் துறை 1000 கோடிக்களுக்கு மேல் மோசடி நிகழ்ந்துள்ளதாகவும் தகவல்.

தற்போது உலகம் முழவதும் பிரபலமான ஓரு சொல் கிரிப்டோ கரடன்சி (Cryptocurrency) இது மெய்நிகர் நாணயமாக டிஜிட்டல் உலகில் வலம் வந்து கொண்டுள்ள ஓரு நாணயம்.

பல இந்தியர்கள் பல கோடி ரூபாய்களை கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். ஆனால் இதை பற்றிய முழு அறிவு மிக முக்கியமாகும்.

கடந்த சில நாட்களாகவே அமலாக்கத் துறை (ED) கிரிப்டோ கரண்சி நிறுவனங்களை விசாரித்து வருவதாக தகவல் கசிந்த வண்ணம் உள்ளது. அதில் 1000 கோடிக்கு மேல் கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்கள் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்நிறுவனங்கள் உடனடி கடன் செயலி வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ளது.

கிரிப்டோ மோசடிகள் இந்தியர்களை எச்சரிக்கும் அமலாக்கத் துறை

மேலும் 100 கோடி ரூபாய்க்கு மேல் பயனாளர்களிடமிருந்து கிரிப்டோ நாணயங்களை வாங்குவதற்கும், சர்வதேச பணப்பைகளுக்கு கிரிப்டோ நாணயங்கள் அனுப்பப்பட்ட நிகழ்வுகளுக்கும் விதிக்கப்பட்ட வரிகளை அரசாங்கத்திற்குச் செலுத்தவில்லை எனவும் அந்நிறுவனங்களின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

மேலும் வாசிர் எக்ஸ் கிரிப்டோ (WazirX) நிறுவனம் பல கோடிகளை இந்திய அரசுக்கு வரியாகச் செலுத்தாமலும், அதன் வாடிக்கையாளர்களிடமிருந்தும் சில மோசடி ஸ்மார்ட்போன் அடிப்படையிலான லோன் டிஷிங் பயன்பாடுகளுக்கு எதிராக நடந்து வரும் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முக்கிய கிரிப்டோ கரன்சி பரிமாற்ற நிறுவனங்களின் ஒன்றான WazirX இன் ரூ.64.67 கோடி மதிப்புள்ள வங்கி வைப்புகளை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் (ED) தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 3 அன்று இந்திய அமலாக்கத்துறை வாசிர் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன்மாய் லேப் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் சமீர் மத்ரேவிடம் கூறியுள்ளது. அதில் அவர் விசாரணைக்கு அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here