மின் கட்டணம் அதிகரிக்க காரணம் என்ன? மின்துறை அமைச்சர் விளக்கம்

0
9

தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது. மின் கட்டணம் உயர்த்துவதற்கான காரணத்தையும் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விவரித்துள்ளார். 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தா விட்டால், கடன் எதுவும் வழங்கக் கூடாது என ரிசர்வ் வங்கிகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. ஆதலால், ஏழை எளிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில், மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என விளக்கியுள்ளார்.

மின் கட்டணம் அதிகரிக்க காரணம் என்ன? மின்துறை அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் மின் கட்டணம் பற்றிய முக்கிய தகவல்கள் 

 • தமிழகத்திற்கு தற்போது வரை இலவசமாக கொடுக்கப்படும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
 • வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் படி நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் அடைவர்.
 • தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
 • இரண்டு மாதத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 உயர்த்தப்பட்டுள்ளது.
 • இரண்டு மாதத்தில் 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 72.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 • அதே போல் 400 யூனிட் வரை உபயோகப்படுத்துவோருக்கு மாதம் 147.50 உயர்த்த திடமிடப்பட்டுள்ளது.
 • 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 297.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 • இரண்டு மாதங்களில் 600 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் 155 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
 • 700 யூனிட் வரை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு மாதம் 275 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 • 800 யூனிடுக்கு மாதம் 395 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 • 900 யூனிடுக்கு மாதம் 595 மட்டுமே உயர்த்துகிறது.

மேலும், ரயில் நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 65 காசுகள் மட்டுமே உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here