முதுமலை: முதுமலை வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டதுதான் ஆஸ்கர் வென்ற ‘எலிபன்ட் விஸ்பரர்’ ஆவணப்படம். யானைகளுக்காக வைக்கப்படும் மின்வேலியில் சிக்கிக் கொள்ளும் ரகு மற்றும் அம்மு ஆகிய இரண்டு குட்டி யானைகளை பொம்மன் மற்றும் பெல்லி என்ற மலைவாழ் தம்பதி வளர்த்து வேறு பாகனிடம் கொடுக்கும் வரை அந்த யானை குட்டிகளுக்கும் பொம்மன் பெல்லி தம்பதிக்கும் இடையே உள்ள பாச போராட்டங்களை விளக்கும் விதமாக இந்த ஆவணப்படம் உருவாகி உள்ளது. பெல்லி என்ற மலைவாழ் பெண் பேசும் வார்த்தைகளுக்கு ரகு என்ற யானை குட்டி கட்டுப்படும் விதமும் பெல்லியின் கட்டளையை கேட்டு ரகு முட்டிபோட்டு பணியும் காட்சிகளும் உலக சினிமா கலைஞர்களையும் ரசிகர்களையும் கவரந்துள்ளது.
ஊட்டியில் பிறந்து வளர்ந்து கோவையில் கல்லூரி படிப்பை முடித்தவர் கார்த்திகி கான்செல்வஸ் என்ற பெண் இயக்குனர். இவர் இயக்கிய முதல் ஆவணப்படம்தான் ‘எலிபன்ட் விஸ்பரர்’. அவர் இயக்கிய முதல் ஆவணப்படத்திற்கே ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இது தமிழர்கள் மிகவும் பெருமைப்படக் கூடிய விஷயமாக அமைந்துள்ளது.