அதிக சொத்து மதிப்பை இழந்த நபர் என்ற கின்னஸில் இடம் பெற்றார் எலன் மஸ்க்

0
9

அதிக சொத்து மதிப்பை இழந்த நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் உலக பணக்காரர்களில் முதன்மையான இடத்தை பெற்றிருந்த எலன் மஸ்க்.

உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தை நிர்வகித்து வந்த எலன் மஸ்க் தொர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். இவரது பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்து தற்போது அவரின் சொத்து மதிப்பும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி பல திருப்புமுனைகளை ஏற்படுத்த திட்டமிட்டருந்தார்.

டிவிட்டர் நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்றதும் பல முன்னணி நிர்வாகிகளை வேலையிலிருந்து வெளியேற்றி அதிர்ச்சி தந்து வந்தார். தொடர்ந்து டிவிட்டர் கணக்குகளில் போலி கணக்குகளை கண்டறிந்து அதை உண்மையான கணக்குகளுக்கு மட்டுமே டிவிட்டர் நிறுவனம் சாதகமாக நடக்கும் என்றும் பல மாற்றங்களை டிவிட்டரில் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

அதிக சொத்து மதிப்பை இழந்த நபர் என்ற கின்னஸில் இடம் பெற்றார் எலன் மஸ்க்

டிவிட்டரில் ப்ளுடிக் வைத்திருப்பவர்கள் உண்மையான கணக்குகளின் சொந்தக்காரர் என்றும் அவர்கள் டிவிட்டர் நிறுவாகத்திற்கு மாத மாதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி வந்தார். இது போன்ற பல திட்டங்களை செய்ய திட்டமிட்டுருப்பதாகவும் கூறி வந்தார் எலன் மஸ்க்.

சமீபத்தில் தீடீரென டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இவர் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ வாகவும் இருந்து வருகிறார். மின்சார கார் உற்பத்தியில் உலக நிறுவனங்களே தயங்கிய போது டெஸ்லா நிறுவனத்தின் மூலம் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து சாதனை படைத்தவர் எலன் மஸ்க். உலக புகழ் பெற்ற நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஸ்பெஸ்எக்ஸ், போரிங் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

2021 ஆம் ஆண்டு இவரது டெஸ்லாவின் பங்கு 400 டாலர்களை கடந்தது. பின்னர் குறைய தொடங்கி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் சறுக்கினார். இந்நிலையில், உலக வரலாற்றிலேயே அதிக சொத்து மதிப்பை இழந்த நபர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்

அவர் 182 டாலர் மதிப்புடைய சொத்துகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பின்படி 14.8 லட்சம் கோடி சொத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here