கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு

0
12

கால்பந்து அணியை வாங்க உள்ளதாக எலான் மஸ்க் தகவல் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் கால்பந்து அணியை வாங்க போவதாக அறிவிப்பு. நட்சத்திர வீரரான கிறிஸ்டினோ ரொனால்டோ மான்சிஸ்டர் அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் அவர்கள் சமீபத்தில் தான் சுமார் 7.92 மில்லியன் பங்குகளைப் புதிதாக வாங்கினார். மேலும் ட்விட்டர் இன்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அடுத்து 8.5 பில்லியன் டாலர் பங்குகளை அப்புறப்படுத்திய பின்னர் டெஸ்லா பங்குகளை விற்கும் திட்டம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே பெரிய அளவிலான டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார்.

விரைவில் ட்விட்டரை அவர் கையகப்படுத்துவார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிட்டுள்ளார் மஸ்க். இதன் காரணமாக அவருக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் டெலவேர் நீதிமன்றத்தில் ட்விட்டருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார் மஸ்க். அதில் தனது தரப்பு வாதங்களை விவரமாக குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு

அதில் 2021 வாக்கில் இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக வலைதள பக்கத்தில் பதிவாகும் சில பதிவுகளை விசாரிக்கும் வகையில் விதிகளை கொண்டு வந்தது. அதன்படி ட்விட்டர் நிறுவனம் உள்நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் என மஸ்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தன்னை பேச்சு சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் எனவும் அதில் மஸ்க் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ட்விட்டர் செயல்படும் நாடுகளில் அந்த நாட்டின் விதிகளுக்கு நெருக்கமாக செயல்பட வேண்டி உள்ளதாக தான் கருதுவதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து மான்செஸ்டர் கால்பந்து அணியை வாங்க உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here