உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்த ஸ்பேஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க். தற்போது, 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். முதல் இடத்தில் பிரான்சு நாட்டை சார்ந்த பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் தி போரிங் கம்பெனியின் நிறுவனர், நியூரா லிங்க் நிறுவனத்தின் இணை நிறுவனர், ட்விட்டர் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை கவனித்து வருகிறார் எலான் மஸ்க். சமீபத்தில் டிவிட்டரை வாங்கினார் வாங்கியது முதல் இன்று வரை பல மாற்றங்களை தர காத்திருப்பதாகவும் தெரிவித்து அதிரடி நடவடிக்கைகளை செய்து வருகிறார்.
இதில் முதல் பணியாக இந்திய வம்சாவளியான டிவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தலைமை செயல் அதிகாரி மற்றும் முக்கியமானவர்களை பதவியிலிருந்து தூக்கினார். இன்னும் பலபேரை பணியிலிருந்து வெளியேற்ற அவர் டிவிட்டரில் ப்லு டிக் தொடர்ந்து வருவதற்கு மாத தொகை செலுத்த வேண்டி வரும் என்றும் கூறினார். மேலும், போலி டிவிட்டர் கணக்குகளை அதிரடியாக நீக்க உள்ளதாகவும் கூறி வருகிறார்.

இது போன்ற பல நன்மைகளை வாடிக்கையாளருக்கு கொடுக்க காத்திருப்பதாகவும் தெரிவித்து வந்த எலான். இதனால் பாளோவர்ஸ் அனைவருக்கும் குறையும் என்றும் ஓரு நம்பகமான சமூக வலைதளமாக டிவிட்டரை மாற்றவும் பல முன்னணி செயல்களை எடுக்கவுள்ளார்.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை, டெஸ்லா பங்குகள் 4 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. அதனால் இப்போது இரண்டாவது இடத்தில் 164 பில்லியன் டாலர்களுடன் மஸ்க் பின்தங்கி உள்ளார். முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 171 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடத்துக்கு முந்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்: ஏறு தழுவுதல் நம் அடையாளம் தடைகளை வீரத்துடன் முறியடிப்போம்-கமல்
ப்ளூம்பெர்க் நிறுவன உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. பெர்னார்ட் அர்னால்ட்டுக்கு 73 வயது ஆகிறது. இவர் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவராக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.