மனித மூளைக்குள் சிப் பொருத்தி செயலிழந்த நியூரானை தூண்டி விட முடியும்

0
8

மனித மூளைக்குள் சிப் பொருத்தி செயலிழந்த நியூரானை தூண்டி விட முடியும் விரைவில் இந்த திட்டத்திற்கு அனுமதி பெற்று சோதனை முறையில் தானும் தன்  மூளையில் சிப் பொருத்திக் கொள்ளவும் முடிவு எலான் மாஸ்க்.

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதன்மையானவரான மாஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார். கைப்பற்றியதிலிருந்து பலரை வேலையை விட்டு தூக்கினார். பின் பல புதிய திட்டங்களை டிவிட்டரில் கொண்டு வந்தார். தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து உலக மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தையும் அறிவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

தற்போது, மனித மூளையில் சிப் ஓன்றை பொருத்தி அதனை கணிணியுடன் பொருத்தி சோதனை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சோதனையை முதலில் குரங்குகளிடம் வெற்றிகரமாக செய்ல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் வெற்றியுன் கண்டுள்ளதால் மனித மூளைக்குள் சிப் பொருத்தி கணிணியுடன் இணைத்து சோதனை செய்ய திட்டம் இந்த சோதனைக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களும் சமர்பிக்கப்பட்டு உரிய அனுமதி பெற்று விரைவில் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

மனித மூளைக்குள் சிப் பொருத்தி செயலிழந்த நியூரானை தூண்டி விட முடியும்

இந்த சோதனை மூலம் மனிதர்களின் உடலில் ஏற்படும் நியூரான் பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய முடியும். இந்த சிப் மூலம் மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும். முதுகுத் தண்டு எலும்பு முறிவு அல்லது பக்கவாதத்தால் முற்றிலுமாக ஊனமுற்றவர்களை மறுவாழ்வு செய்வதிலும் நியூராலிங்கின் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். மூளையில் எந்த நியூரான் செயலிழந்ததோ அதனை இந்த சிப் மூலம் தூண்டிவிட்டு வேலை செய்ய வைக்கமுடியும் எனக் கூறுகின்றனர்.

நியூராலிங்க் நிறுவனத்தின் இந்த சோதனை வெற்றியடைந்தால், சிப் உதவியுடன் கணினியைக் கட்டுப்படுத்த முடியும். சிப் பொருத்தப்பட்டவரின் மனதில் நினைக்கும் வேலையை கணினி செய்யும். இந்த சோதனையை எலான் மாஸ்க்கின் ஸ்டராட்டப் நிறுவனமான நியூராலிங்க் இதனை செய்கிறது.

நியூராலிங்க் 2021ஆம் ஆண்டில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அதில் ஒரு குரங்கு தனது மூளையில் பொருத்திய சிப்பை பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவதைக் காண முடிந்தது.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here