எலான் மஸ்க் டிவிட்டர் சிஇஓ பதவியை விரைவில் ராஜூனாமா செய்கிறார்

0
15

எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் சமூக வலைதளத்தை வாங்கினார் அதிலிருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். தற்போது, தனது சிஇஓ பதவியை ராஜூனாமா செய்ய உள்ளதாகவம் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் முதல் இடத்தில் இடம் வகித்தவருமான எலான் மஸ்க். சமீபத்தில் டிவிட்டர் சமூக வலைதளத்தை வாங்கினார். இந்த டிவிட்டரை வாங்குவதாக முதலில் கூறி பின்னர் வாங்க மறுத்து வந்தார். அதற்கு பல காரணங்களையும் கூறிவந்தார்.

வாங்க மறுத்த மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்டது பின்னர், ஓரு வழியாக டிவிட்டரின் உரிமையாளரானார். அதன் பின் பல டிவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை புகுத்தும் முறையில் பல முன்னணி நிர்வாகிகளை பதிவியிலருந்து விலக்கினார். டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாகவும் இருந்து வருகிறார்.

எலான் மஸ்க் டிவிட்டர் சிஇஓ பதவியை விரைவில் ராஜூனாமா செய்கிறார்

டிவிட்டரில் உள்ள போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் வண்ணம் பல மாற்றங்களை செய்ய உள்ளேன் என பல தகவல்களை கூறி வந்தார். இதற்காக புளூ டிக் போன்ற உண்மை தன்மையை விலக்கும் வண்ணம் டிவிட்டரில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் கூறி வந்தார். இதற்காக மாதத் தொகை வசூலிக்கவும் திட்டமிட்டு இருந்தார்.

உலகின் சில முக்கியமான செய்தியாளர்களின் கணக்குகளை கடந்த வியாழக்கிழமை முடக்கினார் எலான் மஸ்க். அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டோணியோ குட்டரஸ் வரை அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து அந்த நடவடிக்கையை கைவிட்டார் எலான் மஸ்க். இது போன்ற செயல்களால் மிகவும் வருத்தத்தை தெரிவித்திருந்தனர் வாடிக்கையாளர்கள்.

இந்த நிலையில், டிவிட்டரில் 35 கோடி பார்வையாளர்களை கொண்டுள்ளது. அவர்களிடம் எலான் மஸ்க் இந்த சிஇஓ பதவியில் நான் நீடிக்க வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்று கேட்டிருந்தார். நீங்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவிக்கவும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, 57 சதவீதம் பேர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தனர். மீதம் உள்ளவர்கள் 43 சதவீதம் பேர் பதவி விலக வேண்டாம் என்றும் கூறியிருந்தனர். இந்த வாக்கெடுப்பை மதிக்கிறேன். அதன்படி சிஇஓ கிடைத்ததும் விரைவில் பதவியில் இருந்து விலகிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here