எலான் மஸ்க்: எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் வெளியேற்றம், ப்ளூ டிக் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடிவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதை பின்பற்றி அமேசான், மெட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தினமும் பரபரப்பு செய்தியாக மாறி வரும் மஸ்க், தற்போது அவரது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீண்டும் பரபரப்பு செய்தியாகி உள்ளார். டிவிட்டரை வாங்கிய பிறகு சமீப நாட்களில் எலான் மஸ்க் தனது உடல் எடையை 13.6 கிலோ குறைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மஸ்க் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ‘எடை குறைப்புக்கான 3 படங்களை பகிர்ந்துள்ளார். அதில் 1.நீரிழிவு மருந்து 2.இடைப்பட்ட உண்ணாவிரதம் 3. சுவையில்லா உணவு. இந்த மூன்றுதான் 13.6 கிலோ எடையை குறைக்க முக்கிய காரணம். சில மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் பரிந்துரைத்த உண்ணாவிரதத்தால் தான் 9 கிலோ எடையை குறைத்தேன். பகலில் டயட் உணவு மற்றும் உண்ணாவிரதம் இருப்பது போன்ற உணவு முறையை பின்பற்றிய பிறகு ஆரோக்கியமாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.