டிவிட்டரில் புளூ டிக் சேவை நிறுத்தம் – எலான் மஸ்க் அறிவிப்பு

0
10

புளூ டிக்: டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் புளூ செக் கட்டண சேவையை மீண்டும் தொடங்குவதை டிவிட்டர் நிறுவனம் நிறுத்திவைத்துள்ளது. உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். அவர் சமீபத்தில் சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதனையடுத்து டிவிட்டர் நிறுவனத்தில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவ்வப்போது அவர் அறிவித்து வருகிறார். தற்போது டிவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் ‘புளூ டிக்’கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த டிவிட்டர் கணக்கு அவர்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள டிவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீல நிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

elon musk hold off the blue tick verification

இந்த நிலையில் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் இருந்து மாதம் தோறும் ரூ.1600 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இனி மாதம் தோறும் டிவிட்டர் ‘புளூ டிக்’கிற்கு 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த சேவையை இந்தியாவில் பெற் ரூ.719 செலவாகும்.

இந்த நிலையில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் புளூ செக் கட்டண சேவையை மீண்டும் தொடங்குவதை டிவிட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் புளு செக் சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை வழங்க உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here