END VS PAK: இந்த ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இதில் கலந்து கொண்ட நாடுகளில் சூப்பர் 12 சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. குரூப் பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுது.
இந்த நிலையில் முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியுடன் எந்த அணி மோதவுள்ளது என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதியாகும் என பலர் நினைத்திருந்னர். ஆனால், மாறாக அரையிறுதியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

நேற்று நடந்த இறுதி போட்டிகள் மெல்பர்னில் நடைபெற்றது. முதலாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்கள் எடுத்திருந்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்களை ஷாகின் அப்ரிடி கனவினை தகர்த்து வந்தார். பின் பாகிஸ்தான் சாபில் வீசப்பட்ட பந்துகள் அவர்கள் சொல்லை கேட்டவாறு சென்றது.
இறுதியாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் நிதானமாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். அவர் மட்டுமே அரைசதம் கடந்தார். 19.1 பந்துகளில் 5 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்தது. இதனால் கிரிக்கெடை தாயகமாக கொண்ட இங்கிலாந்து அணி வெற்றி மகுடத்தை சூடியது.
இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற முடியாமல் பாகிஸ்தான் அணி வீரர்கள் துவண்டு போயினர். அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தனர். டி20 உலக கோப்பை போட்டிகளில் இதுவரை இங்கிலாந்து அணி இந்த வெற்றியை சேர்த்து இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.