இந்த காலத்தில் இயற்கையாக கண் இமைகளை பாதுகாப்பதை விட்டுவிட்டு செயற்கையான ஐ லேஸ் போன்றவற்றை இளம் வயது பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கண்களில் வறட்சி ஏற்படுகிறது. இதை தடுத்து கண் இமைகளை பாதுகாக்க சில டிப்ஸ்கள்.
தினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால் கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும்.
தினமும் கண் இமைகள் சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். தேவைப்பட்டால் வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இதனால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல் இமை முடியானது நன்கு வளரும்.
ஆமணக்கெண்ணெய் கிடைக்காதவர்கள் வாஸ்லினை பயன்படுத்தலாம். இது சிறந்த நன்மையை தரும். இரவில் படுக்கும் முன் கண் இமைகள் மீது வாஸ்லினை தடவி காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி விட வேண்டும். இதனால் கண்களுக்கு வேண்டிய மாய்ச்சுரைஸர் கிடைக்க பெற்று கண்கள் ஈரப்பதத்துடன் இருக்க உதவும். மேலும் கண் எரிச்சல், சூடு உள்ளிட்ட பிரச்சினைகளும் தீரும்.
நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான அருமையான கண் இமைகளை பெறலாம். நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள் ஏன் கண் இமைகளுக்கு கூட தினமும் புரோட்டின் நிறைந்த உணவுகள் மட்டுமே வேண்டிய ஊட்டசத்தைக் கொடுக்கும். மீன், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.