ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் உயிரை விடுகிற அளவுக்கு இது முக்கியமானது அல்ல இது வெறும் சினிமா தான் சந்தோஷமா படத்த பார்த்துட்டு பத்திரமா வீட்டுக்கு போனாலே போதும். உயிர் போகின்ற அளவுக்கு கொண்டாட்டங்கள் தேவையில்லை என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம் போன்ற மெகா ஹூட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்காக தான் காத்திருந்தேன் விரைவில் விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் விரைவில் அறிவிப்பேன் என்று கூறினார்.
லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வித்தியாசமான செயல்களை செய்து வருவதால் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகனை வைத்து எடுக்கப்பட்ட விக்ரம் திரைப்படம் மெகா சூப்பர் ஹூட் சினமாவாக இருந்தது. வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தை பார்ப்பதற்காக முதல் நாள் கொண்டாட்டத்துடன் லாரி மீது ஏறி ஆடிப்பாடி வந்த ரசிகர் தீடீரென தடுமாறி விழுந்ததில் அவர் உயிர் பிரிந்தது. இதனால் அவரது குடும்பத்தார் அவரை இழந்து வருத்தத்துடன் இருக்கின்றனர்.
இது பற்றி பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உயிரை விடுகிற அளவுக்கு சினிமாவை கொண்டாட வேண்டாம் சந்தோஷமாக படத்தை பார்த்து விட்டு நல்லப்படியாக வீடு போய் சேர்ந்தாலே போதும் என்று கூறினார். இது வெறும் சினிமா தான் என்றும் தெரிவித்தார். விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட்டை சொல்வேன் எனவும் கூறிச் சென்றார்.
இதையும் படியுங்கள்: துணிவு, வாரிசு படங்களின் முதல் நாள் வசூல்
நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தை கோவையில் ரசிகர்களுடன் அமர்ந்து லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தை பார்த்து பின்னர் இந்த அறிவிப்பை தெரிவித்தார்.