இந்தியன் 2 படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

0
8

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின்  தந்தை யோக்ராஜ் சிங் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் உருவாகி வரும் இந்தியன் 2 ம் பாகத்தின் படப்பிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. உலக நாயகன் கமலுடன் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடிப்பதை தனது இன்ஸ்டா மூலம் தெரிவித்துள்ளார்.

கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் பெரும் சாதனை புரிந்து வந்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் 100 வது நாளை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள கலையரங்கத்தில் விமர்சையாக விழா ஓன்று நடத்தி பாராட்டுகள் விருதுகள் வழங்க உள்ளதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

இப்படத்தின் மிக பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2ல் பிசியாக கமல் நடித்து வருவது அனைவரும் அறிந்த ஓன்றே. லைகா புரொடக்சன்,  அனிருத் கூட்டணியில் இந்தியன் 2 படத்திற்கான பணிகள் கடந்த 2019-ல் தொடங்கின. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள்.

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்றவை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இடைப்பட்ட சூழலில் கமல் விக்ரம் படத்தை நடித்து முடித்து சூப்பர் ஹிட்டாக்கினார். ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில் மீண்டும் இந்தியன் 2 படக்குழு கடந்த செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறது.

அடுத்தாண்டு அக்டோபரில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளில் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்கிராஜ் நடிப்பதை அவரே இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே தர்பார் படத்தில் நடித்தவர். மேலும், 50 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here