இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை விதித்து சர்வதேச கால்பந்து கூட்டமான FIFA உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக FIFA அறிவித்தது. FIFA கவுன்சிலின் பணியகத்தால் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது FIFA சட்டங்களை கடுமையாக மீறுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
“FIFA கவுன்சில் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கின் காரணமாக, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக இடைநீக்கம் செய்ய ஒருமனதாக முடிவு செய்துள்ளது, இது FIFA சட்டங்களை கடுமையாக மீறுவதாகும்” என்று ஒரு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது FIFA.

உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு நீக்கப்படும் என்றும் FIFA தெரிவித்துள்ளது. மேலும் AIFF நிர்வாகக் குழுவின் அதிகாரங்கள் முழுமையாக ரத்துசெய்யப்படும். “இந்த இடைநீக்கத்தால் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 11 – 30 அன்று இந்தியாவில் நடைபெறவிருந்த FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை 2022 திட்டமிட்டபடி தற்போது இந்தியாவில் நடத்த முடியாது” என்று அந்த வெளியீடு மூலம் FIFA கூறியது.