FIFA WORLD CUP 2022: 22 வது பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் இந்தாண்டு கத்தாரில் பரப்பரப்பாக நடைபெற்று வந்தது. அதன் இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்சு அணிகள் மோதின. அதில் பெனால்டி சூட்டில் 4-2 என்று கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்றது. இதன் மூலம் அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை பெற்று அந்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
பிஃபா உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் நவம்பர் 20ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வந்தது. ஆரம்பத்தில் பல சறுக்கல்களை முன்னணியில் இருக்கும் அணிகளும் சந்தித்த போதும் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியானாக விளங்கும் பிரான்சும் அதிரடி கோல் மன்னனாக விளங்கும் அர்ஜென்டினாவும் மோதின.

இந்த உலகக் கோப்பையே அர்ஜென்டினா வீரரான மெஸ்ஸியின் இறுதி போட்டியாகவும் காணப்பட்டது. அதனால் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாகவும் இருந்து வந்தது. ஆட்டம் தொடங்கிய 23 வது நிமிடத்தில் டி மரியாவின் பெனால்டியால் மெஸ்ஸி ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அசத்தினார். அதை தொடர்ந்து ஆட்டத்தின் 36 வது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு டிமரியா இரண்டாவது கோலை லாவகமாக அடித்து முன்னிலையில் நிறுத்தினார்.
பின்னர், 80வது நிமிடத்தில் ஒரு கோல் மற்றும் அடுத்த 92 செகண்டில் அடுத்த கோல் என அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தார் எம்பாப்பே. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது ஆட்டம். அதன் பின் எக்ஸ்ட்ரா நேரம் வழங்கப்பட்டது.
சமனிலையில் இருந்ததால் பரப்பரப்பு காணப்பட்ட மைதானத்திற்கு கூடுதலாக மெஸ்ஸி ஓரு கோலை அடிக்க பிரான்சு வீரரான எம்பாப்பேவும் ஓரு கோலை அடித்து மீண்டும் சமன் அடைய செய்தார். இவ்விருவரின் ஆட்டத்தால் இரு அணி ரசிகர்களும் பரப்பரப்பாக காணப்பட்டனர்.
இதனால் பெனால்டி சூட் அவுட்டுக்கு ஆட்டம் சென்றது. அதில் அர்ஜெண்டினா 4-2 என வென்றது. இதன் மூலம் 1978, 1986 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்றது.
இதையும் படியுங்கள்: Blind T20 World Cup final: இந்தியா கோப்பையை வென்று அசத்தல்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.