FIFA WORLD CUP 2022: ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தாண்டு கத்தார் நாட்டில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பை தொடரில் இறுதி போட்டிகள் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. அதில் நடப்பு சாம்பியனான பிரான்சு 6 முறை இறுதி போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினாவை எதிர் கொள்கிறது.
முதலாவதாக அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இடையே போட்டி நடைபெற்றது. ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்தி வந்த அர்ஜென்டினா அணி வீரர்கள் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி கோலடித்து தனது அணிக்கு முதல் கோலை அடித்து கொடுத்தார்.
அர்ஜென்டினா வீரர் அல்வரெஸ் 2 கோல்களை பறக்க விட்டு அர்ஜென்டினாவிற்கு மொத்தம் 3 கோல்களை உறுதிப்படுத்தினர். இறுதியாக 3-0 அர்ஜென்டினா குரோஷியாவை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றோரு அரையிறுதி போட்டியில் பிரான்சு மொராக்கோ இடையே போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தது. முதல் முறையாக அரையிறுதி போட்டியில் கலந்து கொள்ளும் மகிழ்ச்சியில் மொரோக்கா அணி வீரர்கள் இருந்தனர். நடப்பு சாம்பியனான பிரான்சு கோப்பையை வெல்ல அரையிறுதி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் போட்டியில் விளையாடி வந்தது.
இதில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே பிரான்சு வீரர் தியோ ஹெர்னண்ட்ஸ் தலை உயரத்திற்கு வந்த பந்தை, அட்டகாசமாக வலைக்குள் திருப்பி அடித்து முதல் கோலை அணிக்கு பெற்று தந்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த பிரான்சு தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 79 நிமிடத்தில் மாற்று வீரராக வந்த பிரான்ஸ் வீரர் ராண்டல் கோலோ மானி மேலும் ஒரு கோல் அடிக்க, மைதானத்தில் கூடியிருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
இதையும் படியுங்கள்: INDVSBAN TEST: 2ம் நாள் முடிவில் வங்கதேசம் 133க்கு 8 விக்கெட் இழப்பு
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணியின் அருமையான வாய்ப்பை பிரான்ஸ் வீரர் தடுக்க, பிரான்ஸ் 2- 0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியான பிரான்ஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.