FIFA WORLD CUP 2022: பரப்பரப்பான கால்பந்து கோப்பைக்கான போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்றது குரோஷி மற்றும் பிரேசில் அணிகள். இந்த இரண்டு அணிகளுடனும் போட்டியிட்ட அணிகள் ஏமாற்றம் அடைந்து வெளியேறியது. உலகம் முழுவதும் இந்த கால்பந்து போட்டிகளை காண கோடி கண்க்கான ரசிகர்கள் இருக்கின்றனர். உலக அளவில் கவனம் ஈர்க்கும் விளையாட்டுகளில் முதன்மையானது உலக கால்பந்து போட்டிகள்.
22 வது உலக கால்பந்து போட்டிகள் இந்தாண்டு கத்தார் தலைநகரில் கோலாகலாமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பல கீழ் உள்ள அணிகள் வெற்றி கண்டு புதிய அனுபவத்தை பெற்று உள்ளது. பலம் வாய்ந்த அணியான அர்ஜென்டினாவை வீழ்த்தி சவூதி அரேபியா அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வெற்றியை ஓருநாள் பொது விடுமுறை அளித்து கொண்டாடியது சவூதி. இந்நிலையில், உலக கால்பந்து கோட்டிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காலிறுதி போட்டிகளுக்கான போட்டிகளில் ஜப்பானை வீழ்த்தி குரோஷியா காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. குரோஷிய அணி பெனால்டி ஷாட்டில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதுபோல, தென் கொரியாவுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இதனால் காலிறுதி போட்டிக்கு பிரேசில் அணி தகுதி பெற்றது. இதனை தொடர்ந்து குரோஷி அணிக்கும் பிரேசில் அணிக்கும் காலிறுதி போட்டிகள் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த நெய்மர் இந்த ஆட்டத்தின் முடிவில் களம் இறங்கி கோலை அடித்து அசத்தினார்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.