FIFA WORLD CUP 2022: 22 வது பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் இந்தாண்டு கத்தாரில் நடைபெற்று வந்தது. நவம்பர் 20ம் தேதி முதல் நடைபெற்ற போட்டிகளில் பல முன்னணி அணிகளும் பங்கேற்றன. அதில் ஆரம்பத்தில் சவூதி அரேபியாவுடன் போட்டியிட்ட அர்ஜென்டினா தோல்வியை சந்தித்தது. இதனால் அர்ஜென்டினா அணியை ரசிகர்கள் பெரும் விமர்சனம் செய்து வந்தனர். இதனால் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்ஸிக்கு கூடுதல் பிரச்சனை எழுந்தது. இந்த உலக கோப்பையே அவருக்கு இறுதி என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இறுதி போட்டியில் அர்ஜென்டினாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற பெருமை மெஸ்ஸியையே சாரும். தொடர்ந்து தனது திறைமையான ஆட்டத்தால் மைதானத்தில் இருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தார். நடப்பு சாம்பியனாக விளங்கும் பிரான்சு அணியை வென்று கோப்பையை வென்றது அர்ஜென்டினா.

பரப்பு மிகுந்த இந்த ஆட்டத்தில் 23 வது நிமிடத்தில் சிறந்த கோலை அடித்து அசத்தினார் மெஸ்ஸி. தொடர்ந்து 36 வது நிமிடத்தில் ஓரு கோலை அடித்து அர்ஜென்டினா அணியை முன்னிலைக்கு அழைத்து சென்றார். மறுமனையில் பிரான்சு நாட்டின் முன்னணி வீரரான எம்பாப்பே தொடர்ந்து இரண்டு கோலைகளை அடித்து சமனுக்கு கொண்டு வந்தார்.
பின்னர், மெஸ்ஸி மற்றோரு கோல் அடிக்க மைதானம் ரசிகர்களின் சத்தத்தால் அதிர்ந்தது. மீண்டும் சமனிலைக்கு கொண்டு வர தனது முழுத் திறைமையை பயன்படுத்தி அர்ஜென்டினாவுக்கு எதிராக எம்பாப்பே மேலும் கோலை அடித்தன் மூலம் இரு அணிகளும் சமனில் முடிந்தது. மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு பரப்பரப்பு தலைக்கு மிஞ்சியது. சமநிலையில் இருந்ததால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு பெனால்டி சூட் வழங்கப்பட்டது.
இதில் அர்ஜென்டினா 4 கோல்களை அடித்து 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வென்று மகுடம் சூடியது. அர்ஜென்டினா வெல்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த மெஸ்ஸியின் கனவு நனவானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
கத்தார் உலகக் கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய லயோனல் மெஸ்ஸி, மொத்தம் 7 கோல்கள் அடித்தார். அத்துடன், உலகக் கோப்பை வரலாற்றில் லீக் சுற்று, நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என அனைத்து சுற்றுகளிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும், 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL விருதை முத்தமிட்டார்.
இறுதிப் போட்டியில் தனியாளாக போராடிய பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார். அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப் ஹர்ஸ்ட்-க்கு அடுத்து இறுதிப் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரராக ஜொலித்தார். இத்தொடரில், மொத்தம் 8 கோல்கள் அடித்து, “தங்க காலணி” விருதை எம்பாப்பே வென்றார்.
அர்ஜென்டினாவை கரை சேர்த்த அந்த அணியின் மார்டினெஸ், சிறந்த கோல் கீப்பருக்கான “தங்க கையுறை” விருதை வென்றார். மேலும், அஜென்டினாவின் 21 வயதான என்சோ பெர்னாண்டஸ்-க்கு (Enzo Fernández) சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றதுடன், மெஸ்ஸி, மார்டினெஸ் மற்றும் பெர்னாண்டஸ் ஆகிய 3 பேர் சிறந்த வீரர்களுக்கான விருது வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: உலகக்கோப்பை வென்று அர்ஜென்டினா அசத்தல்
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.