FIFA WORLD CUP 2022: உலக கால்பந்து போட்டிகள் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளின் முழு அட்டவணையும் வெளியாகி உள்ளது.
பிபா நடத்தும் உலக கோப்பை தொடர் இந்தாண்டு கத்தார் தலைநகரில் கடந்த மாதம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பலம் வாய்ந்த அணிகளை புள்ளி பட்டியலில் கீழ் இருக்கும் அணிகள் வென்று அசத்தியது. அந்த வகையில் அர்ஜென்டினா அணியை சவூதி அரேபியா அணி முதன் முறையாக வென்று அசத்தியது.
இந்த வெற்றியை சவூதி அரேபியா ஓருநாள் பொது விடுமுறை அளித்து கொண்டாடி வந்தது. வெற்றிக்கு உதவிய வீரர்கள் அனைவருக்கும் விலை உயர்ந்த கார் பரிசாக அளிக்கப்படும் என்றும் சவூதி மன்னர் அறிவித்திருந்தார். இப்படி பல வினோத வெற்றிகளையும் இந்த ஆண்டு பல அணிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரேசில், குரோசியா, அர்ஜன்டினா, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், மொராக்கோ, இங்கிலாந்து, பிரான்சு என 8 கால்பந்து அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நாளை 9ந் தேதி முதல் காலிறுதி போட்டிகள் தொடங்க உள்ளன. முதலாவதாக பிரேசில் – குரோஷிய மற்றும் அர்ஜென்டீனா – நெதர்லாந்து அணிகள் நாளை மோதுகின்றன. இதனை தொடர்ந்து அடுத்த நாளான 10ந் தேதி போர்ச்சுக்கல் – மொரோக்கோ, பிரான்சு – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதையும் படியுங்கள்: புரோ கபடி லீக்: ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது தமிழ் தலைவாஸ்
13 மற்றும் 14 அன்று அரையிறுதி சுற்றும், 17ந் தேதி 3வது இடத்திற்கான ஆட்டமும் நடைபெறுகிறது. இதனை அடுத்து வருகிற 18ந் தேதி இறுதி போட்டிகளும் நடைபெற உள்ளன.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.