FIFA WORLD CUP 2022: உலக கோப்பை போட்டிகளில் இதுவரை 4 முறை சாம்பியன்ஸ் பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தல் வெற்றியை பதிவு செய்தது ஜப்பான்.
கால்பந்து உலகின் தலைச்சிறந்த கோல் கீப்பராக கருதப்படும் நோயரை வைத்து கோலடித்து அசத்திய ஜப்பான் வீரர் அசானோ. இந்த ஜப்பான் வீரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் சாம்பியன்ஸ் அணியாக வலம் வரும் அர்ஜென்டினாவை வீழ்த்தியது சவூதி அரேபியா இதனால் சவூதி அரேபியா முழுவதும் கொண்டாடி தீர்த்தனர்.
அதேபோன்று ஜெர்மன் அணியை வென்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது ஜப்பான். இந்த ஆண்டுக்கான போட்டிகளை கத்தார் நடத்தி வருகிறது. இந்நிலையில், பல ஆச்சரியமும் அதிர்ச்சியும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. முதன் முறையாக ஆசிய அணிகள் பலம் வாய்ந்த அணிகளை வென்று வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக ஜெர்மன் அணியும் ஜப்பான் அணியும் நேர்க்கு நேர் மோதுயது. இதில் ஆட்டம் முதலே ஜெர்மன் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் ஜப்பான் கோல் கீப்பர் ஜெர்மனி வீரரை கீழே தள்ளிவிட நடுவர் பெனால்டிக்கு விசில் ஊதினார்.
ஜெர்மனி வீரர் குண்டகோன், பெனால்டியை லாவகமாக கோல் வலைக்குள் தள்ளி அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஜெர்மனி வீரர்களின் தாக்குதலை அசால்டாக தகர்த்தெறிந்தார் ஜப்பான் கோல் கீப்பர்.
பந்தை ஜெர்மன் அணியிடம் வாங்கவே சிரமத்துக்குள்ளான ஜப்பான் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி தீவிரப்படுத்தியது. ஜப்பான் வீரர் டோன், பந்தை கோல் வலைக்குள் அடித்து ஆட்டத்தை சமன்படுத்தினார். ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஜப்பான் பாதியிலிருந்து கொடுத்த லாங் பாஸை அசால்டாக கையாண்டு உலகின் தலை சிறந்த கோல் கீப்பர் நோயரை உரையவைத்து கோல் அடித்தார் ஜப்பான் வீரர் அசானோ.
இதையும் படியுங்கள்: உலக கால்பந்து போட்டியால் IFIFA விற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா
ஆட்டத்தின் இறுதியில் கோல் விழுந்ததால் சமன்படுத்த ஜெர்மனி கடுமையாக போரடியது ஆனாலும் எந்த பலனும் இல்லை. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் ஜப்பான் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் முதல் முறையாக ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் வரலாறு படைத்துள்ளது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.