FIFA WORLD CUP 2022: உலக கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் கடந்த 20ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சவூதி அரேபிய வென்று வரலாற்று சாதனை படைத்தது அதன் காரணமாக சவூதி வீரர்களுக்கு உலகின் விலை உயர்ந்த காரான (ROLLS ROYCE PHANTOM) பரிசாக வழங்க அந்நாட்டு மன்னர் முடிவு செய்துள்ளார்.
இந்த காரின் மதிப்பு இந்திய மதிப்பில் 8.99 கோடி ரூபாய் முதல் 10.48 கோடி ரூபாய் வரை ஆகும். இந்த காரை சவூதி வீரர்கள் ஓவ்வொருவருக்கும் வழங்கவும் திட்டம். இதற்கு முன்னர் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அர்ஜென்டினாவை வெற்றி பெற்ற மறுநாள் சவூதி முழுவதும் பொது விடுமுறை நாளாக அரசு அறிவித்து இதனை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவிற்காக கோல் அடித்து விட்டார்தான். ஆனால் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி அரேபியா இதற்கு பதில் கோல் அடித்து சரிவில் இருந்து மீண்டது. இந்த கோலை அடித்தவர் அல்-ஷெஹ்ரி (Al-Shehri). இந்த அதிர்ச்சியில் இருந்து அர்ஜென்டினா மீள்வதற்குள் சவுதி அரேபியா 2வது கோலையும் அடித்து விட்டது. சவுதி அரேபியாவின் அல்-டவ்சரி (Al-Dawsari) இந்த கோலை அடித்தார்.
முதல் கோல் அடிக்கப்பட்ட அடுத்த 5வது நிமிடத்திலேயே, அதாவது 53வது நிமிடத்திலேயே சவுதி அரேபியா 2வது கோலை போட்டது. இதற்கு பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை, சவுதி அரேபியா வீழ்த்தியது.
இதையும் படியுங்கள்: உலக கால்பந்து போட்டியால் IFIFA விற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா
இந்த இருவரின் கோல்களால் சவூதி அரேபியா முழுவதும் கொண்டாட்டத்தில் திளைத்தது. தற்போது, வெற்றியை தந்த அந்த வீரர்களை கொண்டாடும் விதமாக சவூதி வீரர் ஓவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராயல்ஸ் பைத்தான் காரை பரிசாக வழங்க அந்நாட்டு மன்னர் முகமது பின் சல்மான் அறிவிப்பு.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.