FIFA WORLD CUP 2022: பலம் வாய்ந்த அர்ஜென்டினா கால்பந்து அணியை வீழ்த்தி சவுதி அரேபியா சாதனை புரிந்துள்ளது.
உலக அளவில் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஓன்று கால்பந்து ஆட்டம் இதற்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். உலகம் முழவதும் உள்ள 200 நாடுகள் இந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் உலக கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உலக கால்பந்து தொடர் 1930 ஆம் ஆண்டு உருகுவேவில் தொடங்கியது. அப்போது 13 நாடுகள் மட்டுமே பங்கு பெற்று வந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி உருகுவே சாம்பின்ஸ் பட்டம் வென்றது. அதனை தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு ஓருமுறை இந்த உலக கால்பந்து போட்டிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

பிஃபா உலக கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்தி சாதனை படைத்தது சவுதி அரேபியா அர்ஜென்டினாவின் கடைசி நேர முயற்சிகளை சவூதி அரேபியாவின் விக்கெட் கீப்பர் முகமது தடுத்து நிறுத்தினார்.
அர்ஜென்டினாவின் கால் மன்னன் மெர்ஸியின் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை சவூதி அரேபியா வீரர்கள் தடுத்து நிறுத்தி பந்தினை எதிர்திசையில் எடுத்து சென்றனர் இதன் விளைவாக மெர்ஸியால் கோல் அடிக்க முடியாத நிலையில் சவூதி அரேபியா பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று சாதனை புரிந்தது. 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி வென்றது.
இந்தியாவில் உலகக் கோப்பை 2022 தொடரை டிவியில் எந்த சேனலில் மற்றும் ஆன்லைனில் எங்கு பார்ப்பது என்று பலருக்கும் குழப்பம் நிலவி வருகிறது. FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்போர்ட்ஸ்18 எச்டி டிவி சேனல்களில் நேரடியாக கண்டு மகிழலாம்.
ஜியோ சினிமா செயலியிலும் www.jiocinema.com/sports என்ற இணையதளத்திலும் இலவசமாகக் கண்டு மகிழலாம். மேலும் ஜியோ சினிமாவில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளின் வர்ணனையோடு பார்க்க முடியும்.
இதையும் படியுங்கள்: DLS முறைப்படி இந்தியா நியூசி 20 ஓவர் தொடர் சமனில் முடிந்துள்ளது
இது போன்ற பல வகையான தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.